| Player: | SE Marsh |
DateLine: 8th September 2008
முழுப்பெயர்: ஷான் எட்வர்டு மார்ஷ்
 
பிறப்பு: 9 ஜூலை 1983, நாரோஜின், மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்ப்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன் 
விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, கிங்ஸ் லெவன் பஞ்சாப். 
உறவினர்: ஜெப் மார்ஷ் (தந்தை) 
அறிமுகம்:டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: ஜூன் 24, 2008 அன்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே கிங்ஸ்டவுனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 6, 2008 அன்று மேற்கு ஆஸ்திரேலியா - விக்டோரியா இடையே பெர்த்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
ஆஸ்திரேலிய அணியின் புதிய அதிரடி பேட்ஸ்மேன். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெப் மார்ஷின் மகன். இவரது தந்தை கிரிக்கெட் வீரர் என்பதால் இளம் வயதிலிருத்தே தன் தந்தை கிரிக்கெட் விளையாடும் இடங்களுக்கெல்லாம் இவரும் செல்வார் என்பதால் இவருக்கும் கிரிக்கெட் பிடித்துப் போனது. இதனால், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இவரது தந்தையும் இதற்கு பக்கபலமாய் இருந்தார். 
இதனால் உள்ளூர் அணியில் இடம்பிடித்து தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டினார். தனது தந்தையின் பெயர் சொல்லும்படியும் அவரது ஆட்டத்திறன் இருந்தது. 
மேற்கு ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். இந்த அணிக்காக இவர் 46 முதல்தரப் போட்டிகளில் விளையாடி, 4 சதம், 12 அரை சதங்கள் உள்பட 2581 ரன்கள் குவித்துள்ளார். 
2001-ல் 19 வயதிற்குள்பட்டோருக்கான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 நாட்கள் கொண்ட 3 முதல்தரப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 1சதம், 1 அரை சதம் உள்பட 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். 
2002-ல் நடைபெற்ற 19 வயதிற்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 1 சதம், 1 அரைசதம் உள்பட 317 ரன்கள் குவித்தார். 
இதன்பிறகு உள்ளூர் போட்டிகளில் பங்கு கொண்டு தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டார். 
2007-08,ல் புரா கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்கள் உள்பட 663 ரன்கள் குவித்தார். சராசரி 60.27 ரன்கள் 
2008-ன் துவக்கத்தில் உள்ளூர் அணிகளிடையே நடைபெற்ற 20 ஓவர் போட்டித் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, 3 அரைசதங்கள் உள்பட 290 ரன்கள் குவித்தார். மேலும், இத்தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியின் வழிகாட்டுதலின்படி தனது பேட்டிங் திறமையை இத்தொடரில் மெருகேற்றிக் கொண்டார். 
அதன் காரணமாக, இத்தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்கள் உள்பட 616 ரன்கள் குவித்து, தொடரில் அதிகரன்கள் அடித்தவர் வரிசையில் முதலிடம் பிடித்தார். அதற்காக விருதும் பெற்றார். இவரது அணி அரை இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 
இவரது திறமையை கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஷான் மார்ஷை சர்வதேச அணியில் சேர்த்தது. இதையடுத்து, இதே ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே கிங்ஸ்டவுனில் நடைபெற்ற முதல் ஒருதினப் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை ஆரம்பித்தார். இப்போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி, அணியிலேயே அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 
தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். 
வெளியான தேதி: 04.09.08LATEST SCORES
CURRENT EVENTS
- Cambodia in Indonesia 2025/26
- England in Australia 2025/26
- Ireland Women in South Africa 2025/26
- Myanmar in Bhutan 2025/26
- South Africa in India 2025/26
- South East Asia Games Women's Twenty20 Competition 2025/26
- Sri Lanka Women in India 2025/26
- West Indies in New Zealand 2025/26
- Women's Gulf Cup 2025/26
View all Current Events CLICK HERE


