Player: | BSM Warnapura |
DateLine: 27th August 2008
முழுப்பெயர்: பசநாயகே ஷாலித் மலிண்டா வர்ணபுரா
 
பிறப்பு: 26 மே, 1979, கொழும்பு, இலங்கை. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன் 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை ஏ, தெற்கு பஸ்னஹிரா அணி, பர்கெர் ரெக்ரியேஷன் கிளப், கொழும்பு கிரிக்கெட் கிளப், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்.அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: ஜூன் 25-28, 2007 அன்று இலங்கை - வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: மே 20, 2007 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே அபுதாபியில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: அக்டோபர் 8, 2005 அன்று கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப் - குருநேகலா யூத் கிரிக்கெட் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இலங்கை அணியின் வளர்ந்து வரும் இடதுகை துவக்க ஆட்டக்காரர். ஒருதினப்போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக விளையாடக்கூடியவர். 
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பிறந்து வளர்ந்தவர். 1998-ல் கிரிக்கெட் உலகில் காலூன்ற ஆரம்பித்தார். உள்ளூர் அணியான கொழும்பு கிரிக்கெட் கிளப்பில் ஆடியவர். இதையடுத்து கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து விளையாடினார். 
1998 லிருந்து, 2006 வரை உள்ளூர் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடினார். 2006-ல் துலீப் டிராபி தொடருக்காக, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை ஏ அணியில் இடம் பிடித்தார். இத்தொடரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியும் - வடக்கு மண்டல அணியும் மோதின. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களும். இரண்டாவது இன்னிஸில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 149 ரன்களும் எடுத்தார். மேலும், இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 2 அரை சதங்கள் உள்பட 421 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் முதலிடம் பிடித்தார். இச்சாதனைக்குப் பிறகும் தேசிய அணியில் இவரை சேர்க்கவில்லை. 
மேலும், 2007-ல் வங்கதேசத்திற்கெதிரான இலங்கை ஏ அணியிலும் இடம்பிடித்தார். இத்தொடரின் முதல் போட்டியில் 242 ரன்கள் குவித்து அசத்தினார். இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் உள்பட 151 ரன்கள் குவித்தார். இதே அணியுடன் மோதிய 50 ஓவர் ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 104 குவித்தார். 
இதன் காரணமாக சர்வதேச இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார். மே, 2007-ல், அபுதாபியில் நடைபெற்ற வாரிட் ஒருதின கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்து, மே 20, 2007 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே அபுதாபியில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார். இவர் சர்வதேச அளவில் களமிறங்கிய முதல் ஒருதினப்போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 
2007-ல் வங்கதேசத்திற்கெதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்து ஜூன் 25-28, 2007 அன்று இலங்கை - வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இவர் ஆடும் முதல் போட்டியான இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 
இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி, 82 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 
இதையடுத்து, 2008-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 120 ரன்கள் குவித்து, டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தையும், 2-வது இன்னிங்ஸில் 62 ரன்கள் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது அரைசதத்தையும் பதிவு செய்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 
இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்து விளையாடினார். இரு அணிகளுக்கிடையே கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 115 ரன்கள் குவித்தார். 
மேலும், இதே அணிக்கெதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். 2007-ல் பாகிஸ்தானுக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்தவர், 1 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருதினத் தொடரில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய அம்சமாகும். 
வெளியான தேதி: 25 ஆகஸ்டு 2008.LATEST SCORES
CURRENT EVENTS
- Afghanistan and Bangladesh in United Arab Emirates 2025/26
- Afghanistan in Zimbabwe 2025/26
- Austria in Romania 2025/26
- Canada Women in Uganda 2025/26
- Cyprus International Twenty20 Tri-Series 2025/26
- England in New Zealand 2025/26
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Men's T20 World Cup East Asia Pacific Qualifier 2025/26
- ICC Women's World Cup 2025/26
- India in Australia 2025/26
- South Africa in Pakistan 2025/26
- United Arab Emirates Women in Papua New Guinea 2025/26
- West Indies in Bangladesh 2025/26
- Women's Continental Cup 2025/26
View all Current Events CLICK HERE
