Player: | SK Raina |
DateLine: 18th August 2008
முழுப்பெயர்: சுரேஷ் குமார் ரெய்னா
 
பிறப்பு: 27 நவம்பர் 1986. முராத் நகர். காஸியாபாத், உத்தர பிரதேசம், இந்தியா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன் 
விளையாடிய அணிகள்: இந்தியா, சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா ப்ளூ, 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணி, இந்தியன் பிரசிடெண்ட் லெவன், ராஜஸ்தான் கிரிக்கெட் பிரசிடெண்ட் லெவன், உத்தரபிரதேச அணி. 16 வயதிற்குள்பட்டோருக்கான உத்தரபிரதேச அணி. 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லைஒருதினப் போட்டி: ஜூலை 30, 2005 அன்று இந்தியா - இலங்கை இடையே தம்புல்லாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.
 
இந்திய அணியின் வளரும் சிறந்த, ஆக்ரோஷமான இடதுகை ஆட்டக்காரர். சிறந்த பீல்டரும் கூட. பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி இந்திய அணியின் வீரரான யுவராஜ்சிங் போல விளையாடுபவர். 
உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர். இவரது திறமையான ஆட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே பிரகாசிக்கத் தொடங்கினார். மாநிலங்களுக்கு இடையில் விளையாடும்போது இரண்டு சதங்கள் அடித்து 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். 2005-06 காலகட்டத்தில் 6 போட்டிகளில் விளையாடி 620 ரன்கள் குவித்தார். 
உத்தர பிரதேச அணி, ரஞ்சி கோப்பை என அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட, இந்திய ஒரு தின அணியில் இடம்பிடித்தார். மேலும், இவரது துடிப்பான ஆட்டத்தைக் கண்ட இந்திய அணியின் அந்நாளைய கேப்டன் ராகுல் திராவிட் கூறியதாவது '' சுரேஷ ரெய்னா தான் ஒரு சிறப்பான வீரர் என்பதை அவர் விளையாடடும் முறையிலேயே தெரிவிக்கிறார்''' என்றார். 
மேலும் ரெய்னாவின் மின்னல் வேக பீல்டிங் திறமை அணியினரை வியக்க வைக்கத் தக்கதாகவும் இருந்தது. இதனால் இவர் இந்திய ஒருதின அணியில் இடம்பிடிப்பதற்கும் காரணமாக அமைந்தது. 
2005-06 காலகட்டத்தில், இவர் ஆடிய 11ஒருதினப் போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்தார். அதன்பிறகு சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இடம்பெற முடியாமல் போனார். அதன்பிறகு இடையைடையே அணியில் இடம் பிடித்தாலும் சரியாக விளையாடவில்லை. 
2007-ன் துவக்கத்தில் இரு போட்டிகளில் விளையாடினாலும் தனது திறமையை நிரூபிக்கத் தவறினார். இதனால் இவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதே வருடத்தின் கடைசியில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்தார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணிக்காக, மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 421 ரன்கள் குவித்தார். இந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத் தக்கது. 
இப்போட்டியில் பேட்டிங் திறமையை நிரூபித்ததால் வங்க தேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்தார். 
ஆசியக்கோப்பைத் தொடரில் ஹாங்காங் அணிக்கெதிரான தகுதிச்சுற்றுப் போட்டியில் அபாரமாக ஆடி ஒருதினப்போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். மேலும், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 
இதற்கடுத்து, பாகிஸ்தானுடன் மோதிய தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடி 69 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 
வங்கதேச அணிக்கெதிராக நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 116 ரன்களைக் குவித்தார். மேலும் ஒருதினப் போட்டியில் இவரது அதிக பட்ச ரன்னையும் பதிவு செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இப்படி தொடர்ச்சியான ஒருதினப் போட்டிகளில், ஹாட்ரிக் முறையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இத்தொடரில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் விளாசினார். 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஒருதினப்போட்டியில் விளையாடினார். இத்தொடரில் 2 அரைசதங்கள் விளாசினார். தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறார். 
இவர் திறமை வாய்ந்த இளம் வீரர் என்பது மட்டுமல்ல, இந்தியாவின் துடிப்பான இளம் பீல்டரும் கூட. சுருக்கமாகச் சொன்னல் வளரும் நம்பிக்கை நட்சத்திரம். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08LATEST SCORES
CURRENT EVENTS
- Belgium in Austria 2025
- Cambodia Women in Singapore 2025
- Czech Republic in Romania 2025
- ICC Women's T20 World Cup Europe Division 1 Qualifier 2025
- Norway International T20 Tri-Series 2025
- Pakistan in United States of America and West Indies 2025
- Pakistan Women in Ireland 2025
- Papua New Guinea in Guernsey 2025
- South Africa in Australia 2025
- South Africa in England 2025
- Sri Lanka in Zimbabwe 2025/26
- United Arab Emirates Men's T20I Tri-Series 2025
- Viking Cup 2025
View all Current Events CLICK HERE
