CricketArchive

பிரக்யான் ஓஜா
by CricketArchive


Player:PP Ojha

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: பிரக்யான் பிரயாஷ் ஓஜா

 

பிறப்பு: செப்டம்பர் 5, 1986, குர்தா, ஒரிஸ்ஸா. இந்தியா

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், இந்தியா ஏ, இந்தியா ரெட், 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணி

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: ஜூன் 28, 2008 அன்று இந்தியா - வங்கதேசம் இடையே கராச்சியில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 4, 2007 அன்று ஹைதராபாத் - கேரளா இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் புதிய வரவு பிரக்யான் ஓஜா. அனில் கும்ப்ளே, ஹர்பஜன்சிங், பியூஷ் சாவ்லா வரிசையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர். ஒரு வித்தியாசம் எதுவெனில், இவர் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்.

 

2006-07-ல் ரஞ்சி கோப்பை போட்டியில், ஹைதராபாத் அணி சார்பில் 6 ஆட்டங்களில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு தனக்கு தகுதி உண்டு என காட்டினார்.

 

தென்னாப்பிரிக்க அணியுடன் டெல்லியில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் இவரது திறமையான பந்துவீச்சால் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, இன்னிங்ஸ் வெற்றியையும் அணிக்கு பெற்றுத் தந்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். இப்போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

இதனால் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஜூன் 28, 2008 அன்று இந்தியா - வங்கதேசம் இடையே கராச்சியில் நடைபெற்ற ஒருதினப் போட்டிதான் இவர் அறிமுகமான முதல் சர்வதேச போட்டியாகும். இப்போட்டியில் களமிறங்கிய பிரக்யான் ஓஜா, இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் 174வது வீரரானார். இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி, மூன்று விக்கெட்டுகளை தனது திறமையான பிடியால் (catch) வெளியேற்றினார்.

 

இவரது திறமையான பந்துவீச்சு காரணமாக, அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தாலும் களமிறக்கபடவில்லை. ஒருதின போட்டியில் விளையாடினார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive