| Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 22nd July 2008
வணக்கம்.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
இதில் விளையாட உள்ள இந்திய அணியில் தோனிக்குப் பதிலாக விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 
காயம் காரணமாக உடற்தகுதி பிரச்னையால் சமீபத்தில் நடைபெற்ற ஓருதின தொடர்களில் இருந்து விலகிக்கொண்ட சச்சின் தெண்டுல்கர், தற்போது விளையாடுவதற்கேற்ற உடற்தகுதியைப் பெற்றுள்ளதால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
வங்கதேச முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பையில் நீக்கம் செய்யப்பட்டிருந்த சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 
சமீபகாலமாக அட்டகாசமாக ஆடிவரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர ஷேவாக் - கௌதம் காம்பிர் மீது தேர்வுகுழுவின் கவனத்தை ஈர்த்துள்ளதால் அவர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
தவிர, ஸ்ரீசாந்தை அறைந்ததால் தண்டனைக்குள்ளான ஹர்பஜன் சிங்கும் அணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு துணையாக சுழலில் கலக்குவதற்கு புதுமுகம் பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டுள்ளார். வேகத்திற்கு ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி.சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 
முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23ம் தேதி) கொழும்புவில் துவங்குகிறது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இம்முறை டெஸ்ட் தொடரில் சாதிக்க காத்திருக்கிறார். இவர் டெஸ்ட் அரங்கில் 11,953 ரன்களுடன் அதிக ரன் எடுத்த வீரர் என்ற மேற்கிந்தித் தீவுகள் அணி வீரர் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 172 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது, இப்பட்டியலில் சச்சின் 11,782 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 
இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நடுவர் தீர்ப்பு பற்றிய புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை வீரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது இந்தத் தொடரில் தெரியவரும். ஏற்கனவே புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிலுள்ள தவறுகளை இதில் சரிசெய்ய முடியும் என நம்பலாம். முக்கியமாக எல்.பி.டபிள்யு., முறையில் ஏற்படும் தவறுகளை இதில் நிவர்த்தி செய்யலாம். 
இந்தியாவும் இலங்கையும் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டியிலும், இலங்கை 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 
இந்தியாவும் இலங்கையும் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டியிலும், இலங்கை 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 
இந்தியாவில் 14 டெஸ்ட் போட்டிகள் இலங்கைக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 8-ல் வென்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 
இலங்கையில், இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், இலங்கை 3 போட்டிகளிலும் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 
2001ம் ஆண்டு இலங்கை சென்று டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 
கடந்த 2004ம் ஆண்டில் இருந்து தன் சொந்த மண்ணில் நடைபெற்ற 16 டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணி ஒரு டெஸ்டில் மட்டுமே தோற்றுள்ளது. 
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1986, கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 2005, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 167 ரன்களில் ஆட்டமிழந்தது. 
இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1997, கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 952 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 1990, சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 82 ரன்களில் ஆட்டமிழந்தது. 
இலங்கைக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1313 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். அனில் கும்ப்ளே 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
இந்தியாவிற்கு எதிராக அரவிந்த டிசில்வா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1252 ரன்கள் குவித்துள்ளார். இதில் இதில் 5 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில், முரளிதரன் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் முகமது அசாருதீன் டிசம்பர் 17, 2006-ல், கான்பூரில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக, 199 ரன்கள் எடுத்தார். 
இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, 2, ஆகஸ்டு 1997-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 340 ரன்கள் குவித்தார். 
இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 27, டிசம்பர் 1986-ல், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் 51 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். 
இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 29, ஆகஸ்டு 2001-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 87 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். 
இந்திய அணி: அனில் கும்ப்ளே (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்திர ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், கௌதம் காம்பிர், ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, முனாப் படேல். ஆர்.பி.சிங். 
இலங்கை அணி: வான்டார்ட், வர்ணபுரா, குமார் சங்ககாரா, மஹேல ஜெயவர்தனே (கேப்டன்), திலன் சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா (விக்கெட் கீப்பர்), சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, நுவன் குலசேகரா, சமரா கபுகேதரா.LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain in Bhutan 2025/26
- England in Australia 2025/26
- Ireland Women in South Africa 2025/26
- Oman Women's International T20 Tri-Series 2025/26
- South Africa in India 2025/26
- South East Asia Games Men's Twenty20 Competition 2025/26
- South East Asia Games Women's Twenty20 Competition 2025/26
- Sri Lanka Women in India 2025/26
- West Africa Trophy 2025/26
- West Indies in New Zealand 2025/26
- Women's Gulf Cup 2025/26
View all Current Events CLICK HERE


