CricketArchive

ஆசியக் கோப்பை 'சூப்பர் 4' -ல் மோதும் அணிகள்
by CricketArchive


Event:Asia Cup 2008

DateLine: 28th June 2008

 

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன.

 

முதல் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றோடு நிறைவடைந்தன. 'ஏ' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், 'பி' பிரிவில் ஹாங்காங் அணியும் மோசமாக விளையாடியதால் முதல் சுற்றிலேயே வெளியேறின.

 

இதையடுத்து 'ஏ' பிரிவில் முதலிரண்டு இடத்தைப் பிடித்த இலங்கை, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் முதலிரண்டு இடத்தைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

இதிலுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 6 -ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும்.

 

அணிகள்

நாள்

இந்தியா - வங்கதேசம் 28.06.2008. சனி
இலங்கை - பாகிஸ்தான்29.06.2008. ஞாயிறு
இலங்கை - வங்கதேசம்30.06.2008. திங்கள்
இந்தியா - பாகிஸ்தான்02.07.2008. புதன்
இந்தியா - இலங்கை03.07.2008. வியாழன்
வங்கதேசம் - பாகிஸ்தான் 04.07.2008. வெள்ளி
இறுதிப் போட்டி06.07.2008. ஞாயிறு

 

இந்த போட்டிகள் அனைத்தும் கராச்சியிலுள்ள நேஷனல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகின்றன.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive