Player: | SR Watson |
DateLine: 8th September 2008
முழுப்பெயர்: ஷேன் ராபர்ட் வாட்சன்
 
பிறப்பு: 17 ஜூன் 1981, இப்ஸ்விச், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர் 
விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, டாஸ்மானியா, ஹாம்ப்ஷையர், ராஜஸ்தான் ராயல்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: ஜனவரி 2- 5, 2005 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிஒருதினப் போட்டி: மார்ச் 24, 2002 அன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சுரியனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூலை 2, 2004 அன்று ஹாம்ப்ஷையர் - எஸ்ஸெக்ஸ் இடையே செம்ஸ்போர்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர். திறமை வாய்ந்த நடுவரிசை ஆட்டக்காரர், பந்துவீச்சாளர், பீல்டர். இத்திறமைகள் இருந்தாலும் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக அணியில் நிலையான இடத்தை, இவரால் பிடிக்கமுடியவில்லை. 
தனது 15 வயதில் 17 வயதிற்குள்பட்டோருக்கான குயின்ஸ்லாந்து அணியில் விளையாடினார். இதன்பிறகு டாஸ்மானியா அணியில் இடம்பிடித்து விளையாடினார். இதையடுத்து மிகக்குறுகிய காலத்தில் முதல்தரப் போட்டிகளில் இடம்பிடித்தார். இவர் ஆடிய ஐந்தாவது முதல்தரப் போட்டியில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இதனால் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். 
இவர் 2002-ல் சர்வதேச அணியில் சேர்க்கப்பட்டார். அதற்கு காரணமும் இருந்தது. 2003-ல் நடைபெற இருந்த உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் திறமையான இளம்வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்ற காரணம்தான். 
இளம் வயதில் விளையாடும்போது இவரது முதுகுப்பகுதியில் அடிபட்டது. அதற்கு சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அதே இடத்தில் மீண்டும் இவருக்கு வலி ஏற்படவே 2003- உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தும், அவரால் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. 
இதனால் சிறிது கால ஓய்விற்குப் பிறகு டாஸ்மானியா அணிக்காக மீண்டும் விளையாடினார். 2003-04 நடைபெற்ற புரா கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்கள், 3 அரைசதங்கள் உள்பட 983 ரன்கள் விளாசினார். 
இதன்பிறகு 2004-05 ல் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் தனது டெஸ்ட் அறிமுகத்தை துவக்கினார். தோள்பட்டை காயம் காரணமாக 2005-ற்கான ஆஷஸ் தொடரில் இவர் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், உடல் நலக்கோளாறாலும் அணியில் இடம்பெறமுடியாமல் தவித்தார். 2006-ம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரிலும் இவர் இடம்பெறவில்லை. 
2006-07ல், இந்தியாவில் நடைபெற்ற மினி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தார். இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி துவக்க வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். 
இதன்பிறகு மறுபடியும் உடல்நலக்குறைவு ஏற்படவே அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் சிரமப்பட்டார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனான ஷேன் வார்னேவின் வழிகாட்டுதலின்படி தனது பேட்டிங் திறமையையும், பந்துவீச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார் மேலும் தனது உடற்தகுதியை தக்கவைத்துக் கொள்வதிலும் தன்னை சிறந்த ஆல்ரவுண்டராகவும் இத்தொடரில் மெருகேற்றிக் கொண்டார். 
அதன் காரணமாக, இத்தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் உள்பட 472 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இத்தொடரின் நாயகன் விருதையும் பெற்றார். இவரது அணியே 20 ஓவர் கோப்பையை வென்றது. 
இதன்பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார். இதே ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த ஒரு தின அணியில் விளையாடினார். இரு அணிகளுக்கும் இடையே குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருதினப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 122 பந்துகளில் 126 ரன்கள் குவித்து, தனது அணியை வெற்றிபெறச் செய்தார். அதுமட்டுமின்றி ஒருதின அரங்கில் தனது முதல் சதத்தையும், அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 206 ரன்களும், 6 விக்கெட்டுகளும் வீழ்த்தியது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் பெற்றார். 
தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். 
வெளியான தேதி: 04.09.08LATEST SCORES
CURRENT EVENTS
- Cyprus in Croatia 2025
- France in Sweden 2025
- Gibraltar Women in Estonia 2025
- India in Bangladesh 2025
- India in England 2025
- New Zealand in Zimbabwe 2025
- Pakistan in United States of America and West Indies 2025
- Pakistan Women in Ireland 2025
- South Africa in Australia 2025/26
- Switzerland in Estonia 2025
- Viking Cup 2025
View all Current Events CLICK HERE
