| Player: | MC Henriques |
DateLine: 4th September 2008
முழுப்பெயர்: மோய்சஸ் கான்ஸ்டான்டினோ ஹென்ரிக்ஸ்
 
பிறப்பு: 1 பிப்ரவரி 1987, பன்சால், போர்ச்சுகல். 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: ஆல் ரவுண்டர் 
விளையாடிய அணிகள்: 19 வயதிற்குள்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணி, ஆஸ்திரேலியன் இன்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ், நியூ சவுத் வேல்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை.ஒருதினப் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை.
20 ஓவர் போட்டி: ஜனவரி 8, 2006 அன்று நியூ சவுத் வேல்ஸ் - குயின்லாந்து இடையே சிட்னியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.
 
ஆஸ்திரேலிய அணியின் புதிய மிதவேகப் பந்து வீச்சாளர். இன்னும் இவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்றாலும் தற்போது வங்க தேச அணிக்கெதிரான ஒருதின அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் அணியில் இடம் பிடிப்பதற்கு அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்தான் காரணம் எனலாம். 
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வங்கதேச அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம் பெற்றிருந்தார். முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் இவர் கலந்து கொள்ளாமல், டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு ஜாலியாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கியது. இவருக்கு பதிலாகத்தான் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். 
போர்ச்சுகல் நாட்டில் பிறந்தவர் ஹென்ரிக்ஸ். இவர் குயந்தையாக இருக்கும்போதே இவரது பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்துவிட்டனர். இவரது 9 வயதிலேயே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 
இதன்பிறகு இவர் உள்ளூர் அணிகளில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடத் தொடங்கினார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தேர்வாளரான ட்ரெவர் ஹோக்ன்ஸ் (Trevor Hohns), இவரது திறமையைக் கண்டபின் 2004-ல் கூறியதாவது '' ஹென்ரிக்ஸ் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது'' என்று புகழ்ந்துள்ளார். 
2006-ல் இலங்கையில் நடைபெற்ற 19 வயதிற்குள்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டானாக விளையாடினார். அப்போது இவருக்கு வயது 16 மட்டுமே. 
இத்தொடரின் போது இலங்கை அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். 
இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 150 ரன்கள் எடுத்தார். மேலும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 
இதன்பிறகு ஐ.என்.ஜி. கோப்பைக்கான உள்ளூர் போட்டியில், நியூசவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடினார். இவரது அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற இக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் முன்வரிசை வீரர்கள், பின் வரிசை வீரர்கள் ஆட்டமிழந்தாலும் அணியின் வெற்றிக்கு பாடுபடுடாரு. 21 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்தாலும் அணியின் வெற்றிக்கு இவரது ரன்கள் பேருதவியாக இருந்தன. இவரது அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. 
2006-ல் புரா கோப்பைக்கான தொடரில், நியூ சவுத்வேல்ஸ் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற முதல் தரப் போட்டியில் விளையாடினார். முதல் தரப்போட்டியில் இவர் முதன்முதலாக இப்போட்டியில்தான் அறிமுகமானார். 
இதே தொடரில் இவரது அணிக்கும், குயின்ஸ்லாந்து அணிக்கும் இடையேயான போட்டியில் அற்புதமாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இவரது அணியே வெற்றி பெற்றது. 
உள்ளூர் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியதால் தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் சர்வதேச ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். 
வெளியான தேதி: 02.09.08LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain in Bhutan 2025/26
- Brazil in Argentina 2025/26
- England in Australia 2025/26
- ICC Women's Emerging Nations Trophy 2025/26
- Ireland in Bangladesh 2025/26
- Ireland Women in South Africa 2025/26
- Mini South East Asia Games 2025/26
- Myanmar Women in Singapore 2025/26
- Pakistan International T20 Tri-series 2025/26
- South Africa in India 2025/26
- South East Asia Games Women's Twenty20 Competition 2025/26
- West Africa Trophy 2025/26
- West Indies in New Zealand 2025/26
View all Current Events CLICK HERE


