CricketArchive

மிட்செல் ஜான்சன்
by CricketArchive


Player:MG Johnson

DateLine: 6th September 2008

 

முழுப்பெயர்: மிட்செல் கய் ஜான்சன்

 

பிறப்பு: 2 நவம்பர் 1981, டவுன்ஸ்வில்லே, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை வேகப்பந்து வீச்சாளர், மிதவேகப்பந்து வீச்சாளர்.

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: நவம்பர் 8-12, 2007, ஆஸ்திரேலியா - இலங்கை இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: டிசம்பர் 10, 2005 அன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 6, 2006 அன்று குயின்ஸ்லாந்து - டாஸ்மானியா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப் பந்து வீச்சாளர். 189 செ.மீ. உயரம் கொண்டவர். இவரது உயரம், இவர் வீசும் வேகப்பந்திற்கு பேருதவியாக இருக்கிறது. இவரது உயரம், ஓடும் திறன், பந்து வீசும் திறன், பந்தை வேண்டிய திசையில் திரும்பச் செய்ய வைக்கும் திறன், இடது கை பந்து வீச்சு போன்றஙைகளெல்லாம் இவரது பலங்கள் ஆகும். இதனால் பிரெட்லீக்கு இணையான வேகத்தில் பந்து வீசுவார்.

 

சர்வதேச அணியில் இடம்பெறுவதற்கு முன் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடி, அந்த அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தார். இந்த அணிக்காக, 2004-05 காலகட்டத்தில் காயமடைந்திருந்தாலும், தனது உடல்திறனை மேம்படுத்தி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் ஏ அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்தார்.

 

2005- டிசம்பரில் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாப்பல்-ஹாட்லி தொடரின் இறுதிப்போட்டியில் தனது முதல் சர்வதேச ஒருதினப்போட்டியில் அறிமுகமானார்.

 

இதன்பிறகு 2006-ல் வங்கதேசத் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணியில் நிலையாக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்பிறகு மலேசிய தொடர், இந்தியத் தொடர் என பல தொடர்களில் விளையாடியபோது சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா, ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சன் போன்ற சர்வதேச வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து தனது திறமையை நிரூபித்தார்.

 

2007 உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாயிருந்தார். 2007-08 காலகட்டத்தில்தான் இவரால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முடிந்தது. இதன்பிறகு நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக பந்து வீசினார்.

 

இந்திய அணி டிசம்பர் 2007 ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் அணியில் இடம்பிடித்தவர் 4 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி ஒரு அரை சதம் உள்பட 112 ரன்களும் குவித்தார்.

 

இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருதினத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு போட்டியாக தற்போது இடதுகை மிதவேகப் பந்து வீச்சாளரான நாதன் பிராக்கனும் அணியில் வந்துவிட்டார்.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

வெளியான தேதி: 03.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive