CricketArchive

பிரெட் கீவ்ஸ்
by CricketArchive


Player:B Geeves

DateLine: 4th September 2008

 

முழுப்பெயர்: பிரெட் கீவ்ஸ்

 

பிறப்பு: 13 ஜூன் 1982, கிளார்மோன்ட், டாஸ்மானியா, ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, டெல்லி டேர் டெவில்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை.
ஒருதினப் போட்டி: ஆகஸ்ட் 30, 2008 அன்று ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையே டார்வினில் நடைபெற்ற ஒருதினப் போட்டி.
20 ஓவர் போட்டி: டிசம்பர் 31, 2007 அன்று மேற்கு ஆஸ்திரேலியா - டான்சானியா இடையே பெர்த்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.

 

ஆஸ்திரேலிய அணியின் புதிய மிதவேகப் பந்து வீச்சாளர். டாஸ்மானிய அணியின் பிராதான பந்துவீச்சாளராக இருந்தவர்.

 

2000- த்தில், டாஸ்மானியா அணியில் சேர்ந்து கிரிக்கெட் உலகில் காலடி வைத்தார். டாஸ்மானியா அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான உள்ளூர் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார்.

 

அதன் பிறகு அதே அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாடினார். 2004-05 காலகட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியமல் போனது. இருப்பினும் தளராத மனம் கொண்டு காயத்திலிருந்து மீண்டார். தீவிர பயிற்சிக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். அவரது பந்து வீச்சுத் திறமை நாளுக்கு நாள் மெருகேறியது.

 

இந்த ஆண்டு துவக்கத்தில் உள்ளூரில் நடைபெற்ற புரா கோப்பை, எப்.ஆர் கோப்பை எனப்படுகிற போர்டு ரேஞ்சர் கோப்பை போட்டித் தொடரில் அற்புதமாக பந்து வீசி அசத்தினார்.

 

இத்தொடரின் இறுதிப்போட்டியில் டான்சானியா அணியும், விக்டோரியா அணியும் மோதின. அப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டான்சானியா அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும் இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

 

உள்ளூர் போட்டிகளில் இவர் சிறப்பாக பந்துவீசியதால் தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் சர்வதேச ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

இத்தொடரில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருதினப் போட்டியில், சர்வதேச அளவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தலாக பந்து வீசினார். 5 ஓவர்கள் மட்டுமே வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

 

வெளியான தேதி: 02.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive