CricketArchive

டேவிட் ஹஸ்ஸி
by CricketArchive


Player:DJ Hussey

DateLine: 30th August 2008

 

முழுப்பெயர்: டேவிட் ஜான் ஹஸ்ஸி

 

பிறப்பு: 15 ஜூலை 1977, மோர்லே, மேற்கு ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சஸ்ஸெக்ஸ் கிரிக்கெட் வாரிய அணி, நாட்டிங்ஹாம்ஷையர், விக்டோரியா அணி.

 

உறவினர்: மைக் ஹஸ்ஸி (அண்ணன்)

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: ஜூலை 4, 2008 அன்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே பாஸெட்டெர்ரேவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூலை 2, 2004 அன்று நாட்டிங்ஹாம்ஷையர் - துர்ஹாம் இடையே நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் அறிமுக நடுவரிசை ஆட்டக்காரர். இவரது அண்ணன் மைக் ஹஸ்ஸியும் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஆவர். அண்ணன் கிரிக்கெட் உலகில் காலடி வைத்ததால் அவரை பின்பற்றி கிரிக்கெட்டில் காலடி வைத்தார்.

 

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மோர்லே நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். 2001-ல் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார். இளம் வயதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். 2001, மேயில் சஸ்ஸெக்ஸ் கிரிக்கெட் வாரிய அணிக்கும், ஷார்ப்ஷையர் அணிக்கும் இடையே நடைபெற்ற 'ஏ' தர (List A) போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் இவர் 46 ரன்கள் எடுத்தார்.

 

2001- ஆகஸ்டில், சஸ்ஸெக்ஸ் கிரிக்கெட் வாரிய அணிக்கும், எஸ்ஸெக்ஸ் கிரிக்கெட் வாரிய அணிக்கும் இடையே நடைபெற்ற முதல்தரப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

அன்று முதல் அவர் சர்வதேச அணியில் இடம் பிடிக்கும் வரை, அவர் முதல்தரப் போட்டிகளில் அடித்த ரன்களின் எண்ணிக்கை 12888 ஆகும். இவரத் அண்ணன் மைக் ஹஸ்ஸி போல் இவரும் முதல்தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை காட்டியதால்தான் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 

இவரது திறமையைக் தாமதமாகக் கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இவரை 2008-ல்தான், ஆஸ்திரேலிய அணியில் சேர்த்தது.

 

இவர் முதன்முதலாக சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தது, இந்தியாவிற்கு எதிராக பிப்ரவரி 2008-ல், மெல்போர்னில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில்தான். இப்ப்போட்டியில் இவர் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் இந்திய அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். இப்போட்டியில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது. இதன் பிறகே இவர் ஒரு தினப் போட்டியில் அறிமுகமானார்.

 

இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் சார்பாக இவருக்கு 625,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் இவரது அண்ணன் மைக் ஹஸ்ஸி ஆகியோருக்கு கொடுக்கப்பட் ஏலத்தொகையைவிட இவரது தொகையே அதிகம் என்பது சுவாரசியமான செய்தியாகும். இந்த அணிக்காக, மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 2 அரை சதம் உள்பட 319 ரன்கள் குவித்தார்.

 

இத்தொடரில் இவர் சிறப்பாக ஆடியதை கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இவரை 2008-ஜூனில், மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த ஒருதின அணியில் சேர்த்தது.

 

முதல் மூன்று ஒருதினப் போட்டிகளில் இவர் களமிறக்கப்படவில்லை. ஜூலை 4, 2008 அன்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே பாஸெட்டெர்ரேவில் நடைபெற்ற 4வது ஒருதினப் போட்டியில் சர்வதேச அளவில், ஒருதினப்போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் ஆடிய முதல் ஆட்டத்திலேயே தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் இவரது அண்ணனான மைக் ஹஸ்ஸியும் விளையாடினார் என்பது கூடுதல் சிறப்பு.

 

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 வது ஒருதினப்போட்டியிலும் அரை சதத்தை பூர்த்தி செய்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளார்.

 

வெளியான தேதி: 28.8.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive